இந்தியா

ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து ZyCoV-D அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும்?

Published

on

உலகின் முதல் ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து ZyCoV-D அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டிஎன்ஏ மூலம் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக் கால பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த ஊசி இல்லாத கொரோனா தடுப்பு மருந்தை 0, 28, 56 நாள் இடைவேளை என 3 முறை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்தை அளிக்கலாம்.

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கப்படும். அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும். ஒரு மாதத்திற்கு 1 கோடு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும்.

ஜனவரி மாதம் முதல் மாதத்திற்கு 4 முதல் 5 கோடி ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என ஜைடஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 73.73 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. 64 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டுள்ளன.

இப்போது இந்தியாவில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

Trending

Exit mobile version