உலகம்

1300 ஊழியர்களை நீக்கிய ஜூம் மீண்டும் வேலைநீக்க நடவடிக்கை.. இந்த முறை தலைவரே நீக்கம்..!

Published

on

கடந்த சில நாட்களாக வேலை நீக்க நடவடிக்கை என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது என்பதும் கூகுள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை தினசரி வேலைநீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உட்பட ஒரு சில காரணங்களால் செலவினங்களை குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனங்கள் கூறினாலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னால் தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி வீடியோ இணையதளமான ஜூம் நிறுவனம் சமீபத்தில் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் தலைவரை எந்தவித காரணமும் இல்லாமல் பணிநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி வீடியோ தகவல் தொடர்பு நிறுவனமான ஜூம் நிறுவனத்தின் தலைவராக கிரெக் டோம்ப் என்பவர் பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென கிரேக் டோம்பை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிரெக் உலகளாவிய பொருளாதார நிலைமைகளை சரி செய்து நிறுவனத்தை லாபத்துடன் வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்ட நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதவி நீக்கம் குறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் பொருளாதார சிக்கலை மட்டுமே காரணம் காட்டி உள்ளதாகவும் தெரிகிறது.

கிரெக் டோம்ப் பதவியை ஏற்கும்போது, ‘மிகவும் மரியாதைக்குரிய தொழில்நுட்ப முறையில் வல்லவர் என்றும் அவரது இணைப்பு எங்கள் நிறுவனத்திற்கு வளர்ச்சி எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதில் பெருமை கொள்கிறோம் என்றும் அவர் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர் என்றும் ஜூம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவான் கூறியிருந்தார்.

கடந்த மாதம் 1300 பேரை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது கிரோக் அவர்களையும் பணி நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜூம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவான் தனது நிதியாண்டு சம்பளத்தை 98 சதவீதமாக குறைப்பதாகவும் கார்ப்பரேட் போனஸையும் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தலைமையில் உள்ள ஊழியர்கள் வரும் நிதி ஆண்டுக்கான சம்பளத்தை 20% குறைவாக பெறுவார்கள் என்றும் அது மட்டும் இன்றி அடுத்த நிதியாண்டில் போனஸ் கிடையாது என்று அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஜூம் நிறுவனத்தின் செயலியை மில்லியன் கணக்கான வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள் பயன்படுத்தியதால் ஜூம் பயன்பாடு தணிசமாக உயர்ந்தது. இதனால் இந்நிறுவனத்தின் வணிகம் 24 சதவீதம் வளர்ச்சியடைந்து மொத்த வருவாய் ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து $1.118 பில்லியன்களாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர சொன்ன பிறகு அந்நிறுவனத்தின் லாபம் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இதனால் தான் ஜூம் நிறுவனம் தற்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version