வேலைவாய்ப்பு

இந்திய உணவு கழகத்தில் மண்டலம் வாரியாக வேலை!

Published

on

இந்திய உணவு கழகத்தில் மண்டலம் வாரியாகக் காலியிடங்கள் 585 உள்ளது. இதில் இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் கிரேடு II, தட்டச்சர் (ஹிந்தி), கணக்காளர், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39)

வயது: 01.07.2029 தேதியின்படி 28 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொதுவாகப் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.2.2020 முதல் 30.3.2020

seithichurul

Trending

Exit mobile version