உலகம்

மனிதர்கள் ‘ஜாம்பி’-களாக மாறலாம்?.. கனடாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

Published

on

2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என உலகம் முழுவதும் பலபேரைப் பலி வாங்கியது. ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் என உருமாறிக்கொண்டும் சென்றது. இப்போது உலக நாடுகள் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் இப்போது கனடாவில் ஜாம்பி வைரஸ் என்ற நோய் மிருகங்களிடம் பரவி வருகிறது.

கனடாவில் இந்த நோய் மான்களிடம் அதிகம் பரவி வருகிறது. அது கால்நடைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. ஜாம்பி நோய் பாதித்த கால்நடைகளை மனிதர்கள் சாப்பிடுவது அல்லது பராமரிக்கும் போது அவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஜாம்பி நோய் மிருகங்களின் மூளையை பெரும் அளவில் பாதித்துள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மிருகங்கள் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடியும். மற்ற மிருகங்களுடன் சேராமல் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக முரட்டுத்தனமாக இருக்கும். உடல் எடை குறையும். பக்கவாதம் போல கை கால்கள் செயல் இழக்கும். மனிதர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் ஜாம்பிகளாக மாற வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் இப்போது வரை இந்த நோய் மனிதர்களிடம் கண்டறியப்படவில்லை என்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜாம்பி வைரல் முதலில் 1960-ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மெல்ல மெல்ல அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version