சினிமா செய்திகள்

ஜாம்பி படத்தின் டிரைலர்

Published

on

அறிமுக இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள காமெடி பேய் படமான ஜாம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

ஹாலிவுட்டில் பல ஜாம்பி படங்கள் வெளியாகி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான டிரைன் டு பூசான் ஜாம்பி படம் உலகளவில் வரவேற்பை பெற்றது.

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படம் ஜாம்பி ஜார்னரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்தது.

அதில், காமெடி மற்றும் யாஷிகாவின் கவர்ச்சி நெடியை தூவி இந்த ஜாம்பி படத்தை இயக்குநர் புவன் நல்லன் உருவாக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version