வணிகம்

Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் மூலம் ரூ.83 கோடி வசூல்! பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?

Published

on

ஆன்லைன் செயலி மற்றும் இனையதளம் மூலம் உணவு ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணத்தை’ (platform fee) வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் வசூல் மார்ச் மாதம் வரை ரூ. 83 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?

Zomato வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கிறது, இது உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது செலுத்தப்படும் கூடுதல் கட்டணம் ஆகும். இந்த கட்டணம், சோமாட்டோவின் பிளாட்ஃபார்ம் பராமரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பணி முன்னேற்றங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த தளக் கட்டணம் Zomato-வின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட வருவாய் (Adjusted Revenue) கடந்த நிதியாண்டில் (2023-24) 27% அதிகரித்து ரூ. 7,792 கோடியை எட்டியுள்ளது. இதில் பிளாட்ஃபார்ம் கட்டணம் முக்கிய காரணியாகும்.

ஆரம்பத்தில் ஆர்டர் ஒன்றுக்கு ரூ. 2 ஆக நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணம், முக்கிய சந்தைகளில் தற்போது ரூ. 6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. Zomato-வின் போட்டியாளரான Swiggyயும் இதே போன்ற பிளாட்ஃபார்ம் கட்டணத்தை விதிக்கிறது.

இந்த பிளாட்ஃபாம் கட்டணம் மற்றும் உணவகங்களுக்கு வசூலிக்கப்படும் கமிஷன், விளம்பர வருவாய் போன்ற காரணிகளால் Zomato-வின் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச டெலிவரி போன்ற சலுகைகளால் டெலிவரி கட்டணத்தில் சிறிதளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தளக் கட்டணம் Zomato-வின் லாபத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த தளக் கட்டணம் குறித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் எதிர்மறையாகவும் உள்ளன. சிலர் இது கூடுதல் சுமையாக உள்ளதாகவும், உணவு விலையை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், Zomato இது தங்களின் சேவைகளை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுவரை, Zomato இந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tamilarasu

Trending

Exit mobile version