Connect with us

வணிகம்

Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் மூலம் ரூ.83 கோடி வசூல்! பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?

Published

on

ஆன்லைன் செயலி மற்றும் இனையதளம் மூலம் உணவு ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணத்தை’ (platform fee) வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் வசூல் மார்ச் மாதம் வரை ரூ. 83 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?

Zomato வாடிக்கையாளர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கிறது, இது உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது செலுத்தப்படும் கூடுதல் கட்டணம் ஆகும். இந்த கட்டணம், சோமாட்டோவின் பிளாட்ஃபார்ம் பராமரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பணி முன்னேற்றங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த தளக் கட்டணம் Zomato-வின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட வருவாய் (Adjusted Revenue) கடந்த நிதியாண்டில் (2023-24) 27% அதிகரித்து ரூ. 7,792 கோடியை எட்டியுள்ளது. இதில் பிளாட்ஃபார்ம் கட்டணம் முக்கிய காரணியாகும்.

ஆரம்பத்தில் ஆர்டர் ஒன்றுக்கு ரூ. 2 ஆக நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணம், முக்கிய சந்தைகளில் தற்போது ரூ. 6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. Zomato-வின் போட்டியாளரான Swiggyயும் இதே போன்ற பிளாட்ஃபார்ம் கட்டணத்தை விதிக்கிறது.

இந்த பிளாட்ஃபாம் கட்டணம் மற்றும் உணவகங்களுக்கு வசூலிக்கப்படும் கமிஷன், விளம்பர வருவாய் போன்ற காரணிகளால் Zomato-வின் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச டெலிவரி போன்ற சலுகைகளால் டெலிவரி கட்டணத்தில் சிறிதளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தளக் கட்டணம் Zomato-வின் லாபத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த தளக் கட்டணம் குறித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் எதிர்மறையாகவும் உள்ளன. சிலர் இது கூடுதல் சுமையாக உள்ளதாகவும், உணவு விலையை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், Zomato இது தங்களின் சேவைகளை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுவரை, Zomato இந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
Tamilarasu
வணிகம்18 seconds ago

Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் மூலம் ரூ.83 கோடி வசூல்! பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (ஆகஸ்ட் 6) ராசிபலன்: உங்கள் நாள் எப்படி இருக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்10 மணி நேரங்கள் ago

2024 ஆகஸ்ட் 5 முதல் 11 வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைந்த பயிற்சி! யார் தகுதி பெறுவார்கள், யார் பெற மாட்டார்கள்? பயனளிக்குமா?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

சிறிய மீன், பெரிய நன்மைகள்! வாரம் ஒருமுறை நெத்திலி மீன்: இதயத்திற்கு நல்லது!

ஆட்டோமொபைல்10 மணி நேரங்கள் ago

போர்டு இந்தியாவிற்கு மீண்டும் வருமா? அதுவும் சென்னைக்கு வருமா?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

ராகி சாக்லேட் பேன்கேக்: குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி!

உலகம்11 மணி நேரங்கள் ago

தங்கம், வைரம், விண் கல் கலந்த உலகின் மிக விலையுயர்ந்த காலணி!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 400

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

வணிகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்: FASTag, HDFC கிரெடிட் கார்டுகள், IPOகள், CAT பதிவு

வணிகம்4 நாட்கள் ago

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! காரணம் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

திடீர் எனக் குறைந்து தங்கம் விலை (29/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (01-08-2024)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2024-ல் தங்கம் வாங்க சிறந்த நாட்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் அதிராடியாக உயர்ந்தது தங்கம் விலை (02-08-2024)!

வணிகம்4 நாட்கள் ago

முக்கிய அறிவிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை!

வணிகம்6 நாட்கள் ago

Ola Electric IPO: முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!