தமிழ்நாடு

ஜொமைட்டோ விவகாரம்: கனிமொழியின் காட்டமான பதிலும் சரிந்த பங்குகளும்!

Published

on

ஜொமைட்டோ நிறுவன ஊழியர் ஒருவரின் சர்ச்சைக்குரிய ஹிந்தி மொழி குறித்த பேச்சு காரணமாக தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் பெரும்பாலோர் ஜொமைட்டோ நிறுவனத்தின் செயலியை அன் இன்ஸ்டால் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நிறுவனம் இது குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட போதிலும் அந்த விளக்கத்தை ஏற்காமல் தமிழர்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளனர். இன்றைய பங்குச்சந்தையில் ஜொமைட்டோ நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொமைட்டோ நிறுவனத்தின் ஹிந்தி மொழி வினை காரணமாக தமிழர்கள் கொடுத்த எதிர்வினைதான் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவு என்பது நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜொமைட்டோ நிறுவனத்தின் பங்குகள் மற்றும் சரிந்து வருவது அந்நிறுவனத்தின் மொழி வெறிக்கு கிடைத்த பரிசு என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜொமைட்டோ நிறுவனம் தமிழகர்களுக்கு யார் யார் இந்தியர்கள் என்று சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை என கனிமொழி எம்பி அவர்கள் காட்டமான ஒரு பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.

Trending

Exit mobile version