தமிழ்நாடு

ஹிந்தி மொழி சர்ச்சை: விளக்கம் அளித்த ஜொமைட்டோ நிறுவனம்!

Published

on

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமைட்டோ ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கஸ்டமர் கேரில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்து உள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நடவடிக்கை என நம்புகிறோம்,

மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைபாட்டை குறிக்கவில்லை,

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்கினோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழை சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்,

மேலும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு உள்ளூர் தமில் கால் சென்டர் சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியிலும் இருக்கின்றோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து உள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்து உள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version