செய்திகள்
உணவை தூக்கி எறியும் Zomato ஊழியர்… அடுத்த சர்ச்சை வீடியோ…
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கஸ்டமர் கேரில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், #RejectZomato என்கிற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் டிரெண்டிங் செய்தனர். இதையடுத்து, Zomato நிறுவனம் மன்னிப்பு கோரியது.
எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்து உள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நடவடிக்கை என நம்புகிறோம் என அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், Zomato ஊழியர் ஒருவர் உணவை வாடிக்கையாளர் வீட்டின் முன்பு தூக்கி எறியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Take a look at the rude behaviour of your delivery agent towards customer
How can he throw away the food ??#Zomato @zomato @zomatocare pic.twitter.com/kyQDaw36Hw— F_I_R_D (@FirD_21) October 19, 2021