இந்தியா

உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்: நமோ சர்காருக்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ!

Published

on

சொமாட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் அதனை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை என ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதற்கு சொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் நேற்று இரவு சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஃபயஸ் என்ற நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார் அந்த வாடிக்கையாளர்.

ஆனால் அவ்வாறு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் பதில் கூறியது. இந்நிலையில் அந்த வாடிக்கையாளர் தனது ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு ஆர்டருக்கான தொகை 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், கிண்டல் செய்தும் வந்தனர். இந்நிலையில் அந்த நபரின் டுவிட்டர் பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான் என கூறியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபர் டுவிட்டரில் தனது ஐடியை நமோ சர்கார் என குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version