தமிழ்நாடு

ஜோஹோ ஸ்ரீதர் வேம்புவின் புதிய சமூக வலைத்தளம்: தமிழில் பெயர் வைத்து அசத்தல்!

Published

on

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் தமிழில் பேர் வைத்து ஒரு சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார் என்பதும் இந்த சமூக வலைதளம் குடும்ப உறவுகளை நீடிக்கும் வகையில் உதவும் என்றும் கூறியுள்ளார்.

மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் வந்தவுடன் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான பயனாளிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான தமிழர் ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தின் சார்பில் Zillum எனப்படும் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளார் இந்த சமூக வலைதளம் குடும்ப உறவுகளை மேன்படுத்த உருவாக்கப்பட்டது என்றும் ஒரு குடும்பத்தினருக்கு என தனி இமெயில், இன்ஸ்டண்ட் மெசேஞ்சர், தரவுத்தளம், பாஸ்வேர்டு நிர்வாகம் என ஒரு குடும்பத்தின் சேவையை தர இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜோஹோ மற்றும் இல்லம் என்பதை இணைக்கும் வகையில் Zillum என்று தனது சமூக வலைத்தளத்திர்கு பெயர் வைத்துள்ளதாகவும், தமிழ் வார்த்தையான இல்லத்தை ஆங்கிலத்தில் ஜோகோ நிறுவனத்தின் இசட் என்ற ஆங்கில எழுத்து உடன் இணைத்துள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் சிலிகான் வேலியில் ஜோஹோ என்ற நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறார் என்பதும் இந்த நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களையே மிஞ்சும் அளவிற்கு தற்போது வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும் தனது சொந்த ஊரை அவர் எப்போதும் மறந்ததில்லை என்பதும் அவ்வப்போது அவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீட்டா வடிவில் இருக்கும் Zillum என்ற சமூக வலைதளம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version