தமிழ்நாடு

அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸ்: மா.சுப்ரமணியன் விளக்கம்

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஜிக்கா வைரஸ் என்பது பகலில் துடிப்பாக இருக்கும் கொசுக்கள் வாயிலாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் பிசிபிக் தீவுகளில் இந்த வைரஸ் தொற்று கடந்த காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிதாக எந்த அறிகுறிகளும் இருக்காது, ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது பிறக்கப் போகும் சிசுக்களை பாதிக்கும் எனப்படுகிறது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஜிக்கா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது சுமார் 1,500 குழந்தைகள் ஜிக்கா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பிறந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2017 ஆண்டில் அகமதாபாத் மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த ஜிகா வைரஸ் தொற்று பற்றி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘ஜிகா வைரஸ் பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version