சினிமா

2.0 டிரெய்லருக்கு சவால் விட்ட ஜீரோ டிரெய்லர்!

Published

on

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் 53வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜீரோ டிரெய்லர் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக மாறியுள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கை நினைவு படுத்தும் கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார். பாலிவுட் முன்னணி நடிகையாகவே கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். கத்ரீனாவால் கழட்டி விடப்படும் ஷாரூக்கான், அனுஷ்கா ஷர்மாவுடன் காதல் கொள்ளும் படமாகவும், விண்வெளியில் ராக்கெட் விடும் சையிண்டிபிக் படமாகவும் இரு வேறுப்பட்ட கதையாக ஜீரோ படம் உருவாகியுள்ளது டிரெய்லர் மூலம் தெளிவாகிறது.

நாளை 2.0 டிரெய்லர் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அப்படத்தின் டிரெய்லருக்கு ஜீரோ படத்தின் டிரெய்லர் பயங்கர போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜீரோவின் சாதனைகளை 2.0 முறியடிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்!

 

seithichurul

Trending

Exit mobile version