சினிமா

ஜீ தொலைக்காட்சியில் கே.ஜி.எஃப் 2… ரசிகர்கள் அதிர்ச்சி….

Published

on

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அத்தனை மொழிகளிலும் ஹிட் கொடுத்தது. கே.ஜி.எஃப் படம் வெளியாகும் போதே அதற்கு இரண்டாம் பாகம் உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. கதையின் ஒரு பாதி மட்டுமே முதல் பாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனால் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்துக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் இப்படத்தை படக்குழு ரிலீஸ் செய்யவில்லை. இப்படத்தை 250 கோடி ரூபாய்க்கு ஓடிடி நிறுவனம் ஒன்று விலை பேசியும் தயாரிப்பு நிறுவன் கொடுக்க முன்வரவில்லை..

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே, தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதேநேரம், தியேட்டரில் வெளியான பின்னரே தொலைக்காட்சியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை.

kgf

Trending

Exit mobile version