விளையாட்டு

திடுதிப்பென திருமண புகைப்படத்தை வெளியிட்ட சாஹல்… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Published

on

இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் தனது திருமண புகைப்படத்தை திடுதிப்பென வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்க்டெ வீரரான சாஹலுக்கும் நடன இயக்குநர் மற்றும் முன்னணி யூட்யூபருமான தனஸ்ரீக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளின் போது சாஹலின் அத்தனை போட்டிகளையும் கேப்டன் கோலி மனைவி அனுஷ்கா உடன் இணைந்து பார்த்து வந்தார் தனஸ்ரீ.

தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று சாஹல்- தனஸ்ரீ திருமணம் குருகிராமில் நடைபெற்றது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்களை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரல் புகைப்படங்கள்.

Trending

Exit mobile version