கிரிக்கெட்

ஓய்வுக்குப் பின்னரும் கலக்கும் யுவராஜ் சிங்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி!

Published

on

தான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வரை மேட்ச் வின்னராக வலம் வந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்தியா டி20 கோப்பையையும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையையும் ஜெயிப்பதற்கு யுவராஜ் சிங் மிக முக்கிய காரணமாக இருந்தவர். தற்போது அவரின் அதிரடி மீண்டும் ஆரம்பித்துள்ளது. ஓய்வு பெற்ற வீரர்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யுவராஜ் கலக்கி வருகிறார். 

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி முன்னாள் ஆட்டக்காரர்கள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டி சத்திஸ்கரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா லெஜெண்ட்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 47 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் 37 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

அவருக்கு துணையாக களத்தில் நின்ற யுவராஜ் சிங் 22 பந்துகளில் 52 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். அவர்களுடன் பத்ரிநாத் 34 பந்துகளில் 42 ரன்களும், யூசுப் பதான் 10 பந்துகளில் 23 ரன்களும்  சேர்த்ததால் அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் யூசுப் பதான் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Trending

Exit mobile version