கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டுக்கு ‘கம்-பேக்’ கொடுக்கும் முயற்சியில் யுவ்ராஜ்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், சென்ற ஆண்டு அனைத்துத் தர சர்வதேச கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இனி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார் யுவ்ராஜ்.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை நிர்வகிக்கும் அமைப்பு பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமாகும். அதற்குத் தற்போது தலைவராக இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேலும் இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடுபவர்கள், வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களிலோ போட்டிகளிலோ பங்கேற்கக் கூடாது என்று விதியுள்ளது.

இதன் காரணமாகத்தான் யுவ்ராஜ் அனைத்துவித போட்டிகளிலும் ஓய்வு பெற்று, வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் அணி சார்பில் எதிர்வரும் சயித் முஸ்தாக் அலி டிராஃபியில் பங்கேற்கத் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் யுவ்ராஜ். அவர் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் விளையாடுவது பிசிசிஐ கையில்தான் உள்ளது.

 

 

 

 

 

Trending

Exit mobile version