சினிமா

யுவன் இல்லையென்றால் நடுதெருவில் நின்றிருப்போம் – நன்றி மறவாத தனுஷ்!

Published

on

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் வரும் வெள்ளியன்று ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் நடுதெருவில் நின்றிருப்போம் என நடிகர் தனுஷ் பேசினார்.

தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. நேற்று நடைபெற்ற பிரஸ் மீட் விழாவில், மாரி 2 பக்கா கமர்ஷியல் மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் தான். படத்தில் அந்த மெசேஜ் இருக்கு, இந்த ட்விஸ்ட் இருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை. தியேட்டருக்கு வந்து ஜாலியா பார்த்துட்டு போற ஒரு சாதாரண படம் தான் என தனது அடக்கத்துடன் கூடிய பேச்சுடன் பேசத் துவங்கினார் தனுஷ்.

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்திருப்பது கூடுதல் பலம் என்றார். மேலும், துள்ளுவதோ இளமை படத்திற்கு அவர் இசையமைக்காமல் இருந்தால், இந்நேரம் நாங்கள் நடுத்தெருவில் இருந்திருப்போம் என தனது நன்றி மறவாமையை வெளிப்படுத்தினார் தனுஷ்.

மேலும், ரோபோ ஷங்கரை மாரி படத்தில் வேண்டாம் என தன சொன்னதாகவும், ஆனால், பாலாஜி மோகனின் நம்பிக்கை கைகொடுத்தது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வரலட்சுமியுடன் தான் நடிக்க பயந்ததாகவும், சாய் பல்லவி நடிப்பில் தன்னையே தூக்கி சாப்பிட்டதாகவும் கூறினார்.

இறுதியாக, இந்த வாரம் பல போட்டிகளுடன் படங்கள் ரிலீசாவது ஆரோக்கியம் இல்லை என்றாலும், இது தவிர்க்க முடியாத போட்டியாகி விட்டது என்றார் தனுஷ். மேலும், நண்பர் விஜய்சேதுபதி, தம்பி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கன்னட நடிகர் யஷ்ஷுக்கு தனது வாழ்த்துகள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version