Connect with us

சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இன்று 39வது பிறந்தநாள் (வீடியோ)

Published

on

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிகப் பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்தப் பாடலை வெவ்வேறு பாடல் ராகங்களில் பாடுமாறு சவால் விடப்படுகிறது.

யுவன் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்களைக் கொண்ட ஒரு இசையமைப்பாளர். ஒரு இசையமைப்பாளருக்காக ஒரு பெருங்கூட்டம் திரையரங்கிற்கு வருகின்றது என்றால் அது இளையராஜா, ரகுமான் தாண்டி யுவனுக்கு மட்டுமே சாத்தியம்.

இளையராஜா கோலோச்சிய காலகட்டங்களில் ஏஆர்.ரகுமான் வந்தபோது மண்ணின் இசையைப் புதிய சப்தங்களின் மூலம் தடம் மாற்றினார். பெரிதாகத் திட்டம் ஏதுமில்லாமல் நான் இசையமைக்கிறேன் என்று விளையாட்டுத் தனமாகக் களமிறங்கிய யுவன் ஷங்கர் ராஜா தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு இசைச் சிற்பியானார். இயக்குநர்களின் இசையமைப்பாளரானார்.

யுவன் இன்று 125 படங்களைத் தாண்டி கொடிக்கட்டி பறக்கும் ஒரு இசையமைப்பாளர், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்டக்கத்தி தினேஷ் வரை இவர் இசையமைக்காத நடிகர்களே இல்லை.

ஒரு படத்திற்கான விசிட்டிங் கார்டாக யுவன் பல படங்களில் இருந்துள்ளார், ஆம், சென்னை-28, துள்ளவதோ இளமை, அறிந்தும் அறியாமலும், ராம், கற்றது தமிழ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் முதுகெலும்பு போல், அப்படி யுவன் தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்தையும் நம் காது வழியாக நம் வீட்டிற்கே கொண்டு வந்துவிடுவார்.

அது கற்றது தமிழ் பிரபாகரனாக, புதுப்பேட்டை கொக்கி குமாராக, காதல் கொண்டேன் வினோத்தாக, அறிந்தும் அறியாமலும் குட்டியாக, ஏன் மங்காத்தா விநாயக் மகாதேவாகக் கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.

பரபர பட்டாம் பூச்சியில் ஒரு அப்பாவின் தாலாட்டு, ஆராரிராரோ அம்மாவிற்கான தாலாட்டு, தோஸ்து படா தோஸ்து என்று நண்பர்களுக்கும் சேர்த்து தாலாட்டு பாடியவர் யுவன்.

வாழ்க்கையில் காதல் வருகின்றதா, காதல் தோல்வியடைகின்றதா, அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணம் செல்கின்றதா, இப்படி இன்பம், துன்பம், வலி, நட்பு, பிரிவு, காதல், காமம் வரை யுவன் நம் வாழ்வின் உணர்வுகளை ஒரு இசையின் வழியாகத் தந்துக்கொண்டே இருக்கின்றார்.

அவரின் 39வது பிறந்தநாளான இன்று நம் வாழ்த்துக்களைக் கூறுவதோடு, இதுபோல் பல உணர்வுமிகுந்த இசையை யுவன் நமக்காகத் தரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!