சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்கு இசை அமைக்க மறுத்த யுவன் ஷங்கர் ராஜா!

Published

on

சிம்பு நடிக்கும் ஒரு படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க மறுத்துவிட்டார் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வேகமாக உருவாகிய ஈஸ்வரன் படம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

32 நாட்களில் ஈஸ்வரன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜாவிடம் இசை அமைக்க சுசீந்திரன் கேட்டுள்ளார். ஆனால் 2 மாதத்துக்குள் படல்கள், பின்னணி இசை கோர்ப்பு எல்லாம் சேர்த்துப் படத்தை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதை கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, தனக்கு வேறு படங்களுக்கான பணிகள் உள்ளன. எனவே இவ்வளவு வேகத்தில் தன்னால் முடியாது என்று பின்வாங்கிவிட்டார்.

அதன் பிறகு தான் சிம்புவின் வாலு, ஒஸ்தி படங்களுக்கு இசை அமைத்து தமனிடம் பேசி படத்துக்கு இசையை பெற்றுள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் முழு பாடல் கம்போசிங்கும் ஜூம் கால் வழியாகவே செய்துள்ளனர். நேரில் இயக்குநரும், இசை அமைப்பாளர் தமனும் சந்திக்கவே இல்லை என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவிடம் ஷெர்ஷா, வலிமை, மாநாடு, டிக்லோனா, ஹக்ரா, பிளான் பன்னி பண்ணனும், ஸ்டார், சானி காயிதம், கோலங்கள், தனுஷ் -செல்வராகவன், சிம்பு – ராம் படம், என 10-க்கும் மேற்பட்ட படங்கள் வரிசையில் உள்ளன. இதனால் தான் யுவன் ஷங்கர் ராஜா ஈஸ்வரன் படத்துக்கு இசை அமைக்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version