சினிமா செய்திகள்
‘வலிமை’ பர்ஸ்ட் சிங்கிளை உறுதி செய்த யுவன்: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!
தல அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் அஜீத் உள்பட படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாகவும் இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ஆன்லைனில் வந்த செய்தி உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது யுவன்சங்கர்ராஜா இதனை உறுதி செய்துள்ளார். சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ சிங்கிள் பாடலை கேட்பதற்கு அனைவரும் தயாராகுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று வலிமை படத்தின் சிங்கிள் பாடல் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியானது என்பதும் அந்த மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே
அதேபோல் ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடலும் எந்தவிதமான இது விளம்பரமும், அறிவிப்பும் இன்றி இன்று மாலை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது