சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படத்திற்காக இணைந்து இசை அமைக்கும் இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா!

Published

on

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் அன்மையில் வெளியாகிய பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இவரது தயாரிப்பில் உறுவாக இருக்கும் அடுத்தப் படத்தின் முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிட்டனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது உறுதியான நிலையில் அதனைச் சீனுராமசாமி இயக்குகிறார். அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் இசையினை இளையராஜாவும் அவருடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் செய்ய இருக்கிறார் என்பது கூடுதல் தகவல் ஆகும். இதனை விஜய் சேதுபதியே டிவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உனது தயாரிப்பின் முதல் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பினை எனக்கு ஏன் அளிக்கவில்லை என்று செல்லமாக யுவனிடம் இளையராஜா கோபித்துக்கொண்டார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 2-ம் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version