தமிழ்நாடு

யூடியூபர் மாரிதாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு: எத்தனை நாட்கள் தெரியுமா?

Published

on

யூடியூபர் மாரிதாஸ் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

அரசுக்கு எதிரான கருத்தை யூடியூபில் பதிவு செய்ததாக மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீது 153 ஏ, 504, 505 (2), 505 (1)பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை மாவட்ட 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவரை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே யூடியூபில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட கிஷோர் கே ஸ்வாமி, சாட்டை துரைமுருகன், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட மதன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில் தற்போது அந்த வகையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version