தமிழ்நாடு

யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை

Published

on

யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு பேசியதாகவும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவரது யூடியூப் சேனல் நிர்வாகியான அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார் என்பதும் சமீபத்தில் அவர் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு, பண மோசடி வழக்கில் கைதான ஆபாச மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. யூடியூபர் ,அதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமூக வலைதள பயனாளி கிஷோர் கே சாமி உள்பட ஒருசில மீது சமீபத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தது கையில் தற்போது யூடியூபர் மதன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் மீதும் சமீபத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு குற்றத்தை தொடர்ச்சியாக செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது யூடியூபர் மதன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை அடுத்து அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version