தமிழ்நாடு

ரவுடிபேபி சூர்யா கைது: யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை!

Published

on

சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக்டாக் உட்பட ஒரு சில சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா மிகவும் ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கோவையை சேர்ந்த முத்து திலகா என்பவர் ரவுடி பேபி சூர்யா மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றியும் தனது கணவரை பற்றியும் ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலில் இழிவாக பேசியதாகவும் தங்களது தனிப்பட்ட தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாகவும் மேலும் மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் ரவுடிபேபி சூர்யாவை தேடி வந்த நிலையில் நேற்று மதுரையில் கைது செய்தனர். அவருடன் அவருடைய நண்பர் சிக்கந்தர் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களை சீரழிக்கும் தவறான விஷயங்களை செய்து வரும் ரவுடிபேபி சூர்யாவும், சிக்கந்தர் ஷாவும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுடைய இரண்டு யூடியூப் சேனல்களையும் முடக்க சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் எந்த விதமான வீடியோக்களை பதிவு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version