உலகம்

யூடியூப் சி.இ.ஓ திடீர் ராஜினாமா.. இந்தியருக்கு அடித்த செம அதிர்ஷ்டம்

Published

on

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் சி.இ.ஓ பதவியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த சூசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளம் யூடியூப் என்பதும் இதில் மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைப்ர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததை. எந்த ஒரு சந்தேகம் என்றாலும் எந்த ஒரு தகவல் வேண்டுமென்றாலும் யூடியூப் இல் சென்று பார்க்கலாம் என்ற அளவுக்கு யூட்யூபில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பது தெரிந்ததே.

அதுமட்டும் இன்றி யூடியூப் மூலம் தற்போது பகுதி நேர வேலை ஆகவும் முழு நேர வேலையாகவும் செய்து ஆயிரக்கணக்கில் லட்ச கணக்கில் ஏன் கோடிக்கணக்கில் கூட சம்பாதிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் யூடியூப் நிறுவனத்தை கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வந்த சிஇஓ சூசன் என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது உடல் நலம் காரணமாகவும் தனது குடும்பம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த காரணமாகவும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

54 வயதான யூடியூப் ஆக இருந்த வோஜ்சிக்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரியாக பதவி ஏற்றார் என்பதும் அவரது தலைமையின் கீழ் யூடியூப் நிறுவனம் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூப் சிஇஓ வோஜ்சிக்கி, ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு நீல்மோகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 2008 ஆம் ஆண்டு யூடியூப் தாய் நிறுவனமான கூகுளில் இணைந்த இவர் 2015 ஆம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக பணிபுரித்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் சுந்தர் பிச்சை இருக்கும் நிலையில் தான் தற்போது அதன் கிளை நிறுவனங்களில் ஒன்றான யூடிப் நிறுவனத்திற்கும் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார் என்பது இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை ஆக பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version