தமிழ்நாடு

செல்பி எடுத்து வேட்பாளரிடம் பணம் பெற்ற இளைஞர்கள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

70 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஜரூராக பணப்பட்டுவாடாவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர்ர்களிடம் சென்று பணம் பெற்றதாகவும் பணம் தாராளமாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஒரு சில இளைஞர்கள் தாங்கள் வாக்கு போட்டதை செல்பி எடுத்து அந்த செல்பியை காட்டி உங்களுக்கு தான் வாக்குப் போட்டேன், பணம் கொடுங்கள் என வேட்பாளரிடம் பணம் பெற்றுச் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேட்பாளர் ஒருவரிடம் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்த புகைப்படத்தை காட்டி பணம் பெற்றதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வேட்பாளர்களிடம் பணத்தைக் கேட்டுப் பெறும் வழக்கம் என்று மாறுமோ அன்று தான் உண்மையான ஜனநாயகம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version