உலகம்

கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு: 30 வயது இளைஞர் அதிர்ச்சி தகவல்!

Published

on

கொரனோ பாதிப்பு காரணமாக தனது ஆணுறுப்பு சிறிதாகி விட்டதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு நீண்டகால பிரச்சினையையும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் நீண்ட காலம் போராடி அதன் பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் கொரனோவால் பாதிக்கப்பட்ட பின்னர் தனது ஆண் உறுப்பு சிறிதாகிவிட்டதாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை இஞ்ச் அளவுதான் தனது ஆணுறுப்பு தற்போது இருப்பதாகவும் அது மட்டுமின்றி விறைப்பு தன்மையும் குறைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த போது அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கலாம் என்றும் பாலியல் உறவு விஷயத்தில் அவருக்கு தன்னம்பிக்கை குறைந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க பாலியல் மருத்துவர் ஒருவர் கூறியபோது கொரனோ வைரஸ் ஆண்குறியின் ரத்த ஓட்டத்தில் நுழைய முடியும் என்பதற்கான ஆதாரம் இது என்றும் கொரனோ வைரஸ் காரணமாக ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடலாம் அல்லது குறையலாம் என்றும் அதனால் விறைப்பு தன்மையும் குறையும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற ஒரு சில ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version