இந்தியா

நடு ரோட்டுல பைக் மேல சாகசம்….உனக்கு இது தேவையா தம்பி?….வீடியோ பாருங்க…..

Published

on

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக சென்று சேரவே பலரும் இருசக்கர வாகங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வாலிபர்கள் பலர் சாகசங்களை செய்வதற்காக பைக்குகளை மிகவும் அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

அதிலும், அந்த வண்டியில் பல வாகனங்கள் செல்லும் சாலையில் பல சாகசங்களை செய்து தன்னை ஹீரோ பால் காட்டுக்கொள்ள முயல்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்பது போல் சாலையில் இது போன்ற செயல்களில் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் உணர்வதில்லை. சில சமயம் அவர்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் சிக்க வைத்து விடுகிறார்கள். இதில் வீலிங் என சொல்லப்படும் பைக்கின் முன் சக்கரதை கைகளால் தூக்கியவாறு செல்வதை பந்தாவாக கருகிறார்கள்.

இந்நிலையில், வாலிபர் ஒருவர் கார், பைக்குகள் செல்லும் ஒரு சாலையில் தன்னுடைய பைக்கின் மீது ஏறி நின்று வீலிங் விட்டு செல்லும் போது ஒரு காரில் மோதி கீழே விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வரைலாகியது.

இந்த வீடியோ பார்த்த பலரும் இது உனக்கு தேவையா தம்பி என பதிவிட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version