இந்தியா

நடு ரோட்டில் இவர் செய்யும் வேலைய பாருங்க! – வைரல் வீடியோ

Published

on

சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை மதிக்காமல் நடந்து கொள்வார்கள். அதிலும், வாலிபர் வயதினர் நண்பர்களோடு சேர்ந்து ஹீரோயிசம் என்கிற போர்வையில் அலப்பறைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது அது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஹைதராபாத் மாநிலத்தில் துர்கம் செருவ் கேபிள் பாலத்தில் இரவு நேரத்தில் ஒரு வாலிபர் நடு ரோட்டில் நடனமாடுகிறார். வாகனங்கள் செல்லும் போது சாலையை கடக்கும் அவர் வாகனங்கள் சென்றவுடன் நடனமாடுகிறார். அவர் அங்கு தனியாக இல்லை. எதிர்புறத்தில் இவரின் நண்பர்கள் அவரின் செயலை ஊக்குவிக்கின்றனர்.

இந்த வீடியோவை சைபராபாத் போலீசார் டிவிட்டரில் வெளியிட்டு ‘சாலையில் சண்டையிடவோ, நடனமாடவோ கூடாது’ என பதிவிட்டுள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version