செய்திகள்

பொங்கல் பரிசுதொகுப்பில் பல்லி… புகார் கூறிய நபரின் மகன் மரணம்….

Published

on

தமிழக மக்கள் இந்த வருட பொங்கலை கொண்டாட அரசு சார்பில் ரேஷன் கடையில் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கோதுமை, ரவை, புளி, வெல்லம், கரும்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கூட்டுறாவு பண்டக சாலை நியாய விலை கடையில் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த புளியில் ஒரு பல்லி இறந்து கிடந்தது என அதிமுக பிரமுகர் நந்தன் என்பவர் ஊடகங்களில் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

எனவே, நந்தன் மீது போலீசார் ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்தனர். எனவே, நந்தனின் மகன் குப்புசாமி இதனால் மன உளைச்சளில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நேற்று அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

Trending

Exit mobile version