தமிழ்நாடு

கத்தியுடன் கெத்து காட்டிய இளைஞர், போலீஸ் கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு!

Published

on

பட்டா கத்தியுடன் கெத்து காட்டிய இளைஞர் ஒருவர் போலீஸ் கவனிப்பிற்கு பின் திடீரென மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வேண்டும் என்பதற்காக சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்துக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனையடுத்து காவல்துறையினர் இந்த வீடியோவை வெளியிட்டவரை மடக்கிப் பிடித்தனர். அவர் சென்னை சேத்துப்பட்டுவைச் சேர்ந்த வினீத் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிடுவது வன்முறையைத் தூண்டுவது போல் ஆகும் என்று காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை செய்தனர்

இதனை அடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட வினீத்துக்கு அறிவுரைகள் கூறி எச்சரித்து இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட வேண்டுமென்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்

இதனை அடுத்து போலீஸ் கவனிப்புக்கு பின் வீடு திரும்பிய வினித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இதுபோன்ற வீடியோவை லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு பதிவு செய்து விட்டேன் என்றும் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் இதுபோன்று வீடியோவை இனி பதிவு செய்ய மாட்டேன் என்றும் எனக்கு ஏற்பட்ட நிலையை தெரிந்துகொண்டு யாரும் இது போன்ற வீடியோவை பதிவு செய்யாதீர்கள் என்றும் அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

seithichurul

Trending

Exit mobile version