தமிழ்நாடு

‘ரம்யா பாண்டியனுக்கு விழுந்த ஓட்டுகூட உனக்கு விழாது…’- கமலை தாறுமாறாக கலாய்த்த அதிமுக

Published

on

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, பிக் பாஸில் விழுந்த ஓட்டு கூட விழாது என்று கூறி கிண்டல் செய்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்.

அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தின் காந்தி சாலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய வைகைச் செல்வன், கமலை சீண்டும் வகையில் உரையாற்றினார்.

அவர், ‘பிக் பாஸ் மாதிரி, எல்லாரும் தனக்கு ஓட்டு போட்டுடுவாங்கன்னு நினைக்கிறாரு கமல். அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. பிக் பாஸ்ல ரம்யா பாண்டியனுக்கு விழுந்த ஓட்டு கூட உனக்கு விழாது. ஏன், ஷிவானிக்கு விழுந்த ஓட்டு கூட உனக்கு விழ வாய்ப்பில்ல. ஏன் என்றால் நானே ரம்யா பாண்டியனுக்கு 5 ஓட்டுகள் போட்டிருக்கேன். மக்கள் உன்னை அரசியலில் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

மக்கள் உன்ன தேர்தல் களத்தில முழுவதுமா நிராகரிப்பாங்க. அரசியலயும் தேர்தல் களத்தையும் நீ பிக் பாஸ்னு நினைச்சிட்டு இருக்கு. பிக் பாஸ்ல விழுவது போல 3 கோடி, 4 கோடி ஓட்டுகள் தேர்தல் களத்தில் விழாது’ என்று கேலி செய்யும் தொனியில் பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version