இந்தியா

DND பதிவு செய்தாலும் விடாமல் துரத்தும் தேவையற்ற அழைப்புகள்: அதிர்ச்சி சர்வே..!

Published

on

செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தங்களுக்கு தேவையானவர்களிடம் மட்டும் பேசுவதற்காகவே ஒவ்வொருவரும் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேவையானவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை விட தேவையற்ற அழைப்புகள் தான் அதிகம் வருகிறது என்று பலரும் செல்போன் மீது வெறுப்பு ஏற்படும் அளவிற்கு தேவையற்ற அழைப்புகள் அதிகம் வருவதாக அதிர்ச்சி சர்வே முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

DND என்ற தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பதிவை செய்தபோதிலும் இந்த அழைப்பு வருகிறது என்றும் இது எப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை தெரியவில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தனியார் நிறுவனம் ஒன்று தேவையற்ற அழைப்புகள் குறித்த கருத்துக்கணிப்பை எடுத்த நிலையில் அதன் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மொத்தம் சுமார் 12,000 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்ததில் 92 சதவீதம் பேர் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருகின்றன என்றும் குறிப்பாக நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இருந்து தான் அதிகமான அழைப்புகள் வருகிறது என்றும் பதில் அளித்துள்ளனர்.

66% பேர் ஒவ்வொரு நாளும் தினசரி 3 அல்லது நான்கிற்கும் மேற்பட்ட அழைப்புகளை பெறுவதாகவும் 96 சதவீதம் பேர் குறைந்தது ஒரு அழைப்புயாவது பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 16 சதவீதம் பேர் தினமும் சராசரியாக 6 முதல் 10 அழைப்புகளை பெறுவதாகும் ஐந்து சதவீதம் பேர் தினமும் பத்துக்கும் மேற்பட்ட தேவையற்ற அழைப்புகளை பெற்றதாகவும் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 342 மாவட்டங்களில் 56,000 பதில்களை பெற்று இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 5 வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்யப்பட்ட போதிலும் அழைப்புகள் வருகிறதா? என்ற கேள்விக்கு 92 சதவீத பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். தேவையற்ற அழைப்புகளால் தங்களது பொன்னான நேரம் வீணாவதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்புல் பதிலளித்தவர்களில் 15,312 பேரில் 50 சதவீதம் பேர், தனிநபர்களின் மொபைல் எண்களில் இருந்து தொல்லைதரும் அழைப்புகள் வருவதாகவும், 29 சதவீதம் பேர் நிறுவனங்கள் அல்லது பிராண்டுகளுக்கு சொந்தமான மொபைல் எண்களில் இருந்தும், 14 பேர் இது ஒரு மையப்படுத்தப்பட்ட லேண்ட்லைன் எண்ணிலிருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற சேவைத் தொழில்களில் பணிபுரியும் குடிமக்கள், தங்கள் நிறுவனங்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ளவர்கள் ஏஜன்சிகளை ஒப்பந்தம் செய்து அழைப்புகளை அனுப்புகிறார்கள் என்றும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version