சினிமா

’மந்திரவாதியை போல உள்ளீர்கள்’: நடிகை ரேவதியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!

Published

on

நடிகை ரேவதியின் உருவத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. ரஜினி, கமல், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

இப்போதும் நடிப்பு இயக்கம் என பிஸியாக இருக்கிறார் ரேவதி. இந்த நிலையில் சமீபத்திய காணொளி ஒன்றில் அவரது தற்போதைய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இந்தி வெப் சீரிஸான டூத் பாரியில் நடித்திருக்கிறார் ரேவதி.

அதிக ஒப்பனை, வித்தியாசமான உடை, நகை அலங்காரம், வெள்ளை கலர் அடிக்கப்பட்ட முடி என பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளார் ரேவதி. இந்தத் தோற்றத்தைப் பார்த்துதான், ‘மந்திரவாதி போல உள்ளீர்கள்’ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர், ‘தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தவறு. கதைக்காக அப்படி மாறி இருப்பார்’ எனவும் சிலர் ரேவதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version