தமிழ்நாடு

Voter ID இல்லையா?- ஓட்டு போட இவற்றில் எதாவது ஒன்றிருந்தால் போதும்

Published

on

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்கலாம் என்கிற நிலை இல்லை என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தல் நாளன்று கீழ் காணும் எதாவது ஒரு ஆவணம் கொண்டு உங்களது வாக்கைச் செலுத்தலாம்:

ஆதார் அட்டை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,

புகைப்படத்துடன் கூடிய வங்கி அட்டை,

அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்,

தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,

ஓட்டுநர் உரிமம்,

நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு),

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

இந்திய கடவுச்சீட்டு,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,

நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றறைக் காட்டி வாக்களிக்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version