சினிமா செய்திகள்

மகாமுனியில் வேற மாதிரியான ஆர்யாவை பார்க்கலாம்!

Published

on

அறிந்தும் அறியாமலும் படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்த ஆர்யா, அடுத்து, நான் கடவுள், அவன் இவன் என்ற வித்தியாசமான கதைகளை அவ்வப்போது தேர்வு செய்து நடித்தார்.

ஆனால், சமீபகாலமாக, கமர்ஷியல் ஃபார்முலாவை மட்டுமே நம்பிய ஆர்யாவுக்கு பெரிய அளவில் படங்கள் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் தனது நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து அவர் நடித்துள்ள மகாமுனி படத்தின் டீஸர் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

மெளனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் மகாமுனி ஆர்யாவுக்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version