கிரிக்கெட்

தமிழக அணியில் இருந்து யார்க்கர் நடராஜன் நீக்கம்: என்ன காரணம்?

Published

on

யார்க்கர் மன்னன் என்று போற்றப்படும் நடராஜன் தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பெளலரக இடம் பெற்றிருந்தவர் நடராஜன் என்பதும் அதன் பின்னர் அவர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலும் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்ட நடராஜன் சமீபத்தில் அவ சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடினார் என்பதும் ஆனால் அவரது பந்து வீச்சு அந்த தொடரில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடர் நடைபெற உள்ள நிலையில் அந்த அணிக்காக விளையாடும் தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பையின் போது நடராஜன் சரியாக பந்து வீசாததால் நீக்கப்பட்டாரா? அல்லது மீண்டும் காயமடைந்தார? என்பது குறித்து தகவல் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் விஜய் ஹசாரே மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியின் முழு விவரம் இதோ: என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.

Trending

Exit mobile version