சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் மேலும் 3 நடிகர்கள்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்தார் என்ற செய்தியை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது மேலும் 3 நடிகர்கள் இணைந்து இருப்பதை அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் வில்லனாக செல்வராகவன் நடிக்க இருப்பதாக சற்றுமுன் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் லிலிபுத் பரூக் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் இந்த படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்த நிலையில் யார் இந்த லிலிபுத் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

பாலிவுட்டில் லிலிபுத் பிரபல காமெடி நடிகர் என்பதும், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் சாகர் உள்பட ஒரு சில பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரஷ்யாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பதும், இதற்காக படக்குழுவினர் அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version