சினிமா செய்திகள்

பேய் படத்தில் நடிக்கும் யோகிபாபு!

Published

on

கன்னட இயக்குனர் சாய் இயக்கும் புதிய படத்தின் ஹீரோவாக நடிகர் யோகி பாபு கமிட்டாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தொடங்கி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகி பாபு. தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய யோகி பாபு தற்போது கன்னட இயக்குனர் சாய் இயக்கத்தில் காதல் மோதல் 50/50 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் காதல், காமெடி கலந்த பேய் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சாதிப்பதற்கு அழகு முக்கியமில்லை திறமை இருந்தால் போதும் என்பதற்கு யோகி பாபு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான தர்மபிரபு மற்றும் கூர்கா படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் யோகிபாபு வீடு தேடி வந்த வண்ணம் இருக்கின்றனவாம்.

seithichurul

Trending

Exit mobile version