சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியை ஓவர் டேக் செய்யும் யோகிபாபு!
இப்போதெல்லாம் நடிகர் விஜய்சேதுபதியை ஒருவிசயத்தில் யோகிபாபு ஓவர் டேக் செய்து வருகிறார். அது என்னவென்றால், வாரம் ஒரு படத்தை கொடுத்து வந்த விஜய்சேதுபதி, தற்போது அவ்வாறு படங்களை கொடுக்க முடியாமலும், வெளியாகும் படங்களும் ஃப்ளாப் பட்டியலில் இணைந்து கொண்டே செல்வது போல் ஆகிவிட்டது.
ஆனால், இப்போ யோகிபாபு வார வாரம் ரிலீசாகவுள்ள படங்களில் தனது தலையை காட்டி விடுகிறார்.
சமீபத்தில் வெளியான தர்மபிரபு படம் நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ள நிலையில், தற்போது, யோகி பாபு நடிப்பில் நாளை கொரில்லா மற்றும் கூர்கா என இரண்டு படங்கள் வெளியாகின்றன.
ஜீவாவின் கொரில்லா படத்தில் காமெடியனாகவும், கூர்கா படத்தில் நாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார்.
இந்த இரு படங்களை தவிர நாளை வெண்ணிலா கபடி குழு 2, தோழர் வெங்கடேசன், போதை ஏறி புத்தி மாறி, வளையல் என மொத்தம் ஆறு தமிழ் படங்கள் வெளியாகின்றன.