சினிமா செய்திகள்

சுந்தரா ட்ராவல்ஸ் இரண்டாம் பாகம்: வடிவேலு கேரக்டரில் பிரபல காமெடி நடிகர்!

Published

on

மறைந்த தமிழ் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் ’சுந்தரா டிராவல்ஸ்’. அசோகன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படம் இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு நடித்த கேரக்டரில் நடிக்க யோகிபாபு மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது யோகி பாபு மற்றும் கருணாகரன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்த திரைப்படம் முழு நீள காமெடி படமாக இருந்தது என்பதும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யோகி பாபு மற்றும் கருணாகரன் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைவரும் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version