இந்தியா

அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அறிவிப்பு!

Published

on

நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் 18 வயதை எட்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,104 பேர் இறந்துள்ளனர். இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளது.

‘உத்தர பிரதேசத்தை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இதன்மூலம் கொரோனா தோல்வி அடையும், இந்தியா வெல்லும்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க, பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் விரைவாக தடுக்கப்படும்’ என்று முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version