சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் உடன் இணைந்த யோகி பாபு- புதுப்படப் போஸ்டர் வெளியீடு

Published

on

பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கான பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ‘பொம்மை நாயகி’ எனப் பெயரிட்டுள்ளனர். முதன்முறையாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நாயகனாக நடிக்கிறார் யோகி பாபு. காமெடி கதாபாத்திரமாக இல்லாமல் முதன்முறையாக சீரியஸ் கதை ஒன்றின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.

இயக்குநர் ஷான் இந்தத் திரைப் படத்தை இயக்கி உள்ளார். இவர் ஒரு அறிமுக இயக்குநர் ஆவார். இந்தப் படத்துக்கான இசையை சுந்தரமூர்த்தி என்பவர் அமைத்துள்ளார்.

Trending

Exit mobile version