சினிமா

ஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி“ என்ற படத்தில் புதியதாக இணைந்த யோகி பாபு

Published

on

“காற்றின் மொழி“ என்ற படத்தை ஹிந்தியிலிருந்து தமிழில் ரீ-மேக்காகி உள்ளது. இப்படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். இப்படத்தை ராதா மோகன் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து மற்றும் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதியதாக நடிகர் யோகி பாபும் படத்தில் இணைந்துள்ளார். தொடர்ச்சியாகப் பல படங்களில் காமெடி ரோலில் கலக்கிவரும் யோகி பாபு காற்றின் மொழியிலும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

யோகி பாபுவின் காதலுக்கு ஜோதிகா உதவுவதுபோல இதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகச் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. படத்தில் இவரது காட்சிகள் மிகக் குறைவு என்றாலும் அந்தக்காட்சிகள் நகைச்சுவை மிகுந்து இருக்குமாம்.

seithichurul

Trending

Exit mobile version