சினிமா செய்திகள்

நேர்த்தியான கிரிக்கெட் வீரராகவே மாறிய யோகி பாபு- வைரல் வீடியோ!

Published

on

சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலேயே அபாரமாக கிரிக்கெட் விளையாடும் திறன் உடன் அசத்தி உள்ளார் நடிகர் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ பதிவான உடனேயே அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

ரெமோ படத்தில் ஒரு கிரிக்கெட் அணித் தலைவன் ஆக தன் சகாக்களுடன் சிவகார்த்திகேயனை சைட் அடித்துக் கொண்டிருப்பார் யோகி பாபு. சினிமாவின் சீன் காட்ட மட்டும் இல்லையாம் நிஜத்தில் கிரிக்கெட்டில் மாஸ் காட்டவும் தனக்குத் தெரியும் என நிரூபித்திருக்கிறார் யோகி பாபு. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொம்மை நாயகி’ படத்தின் நாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு.

பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. யோகி பாபு நடிப்பில் விரைவில் தனுஷின் கர்ணன் படமும் திரைக்கு வர உள்ளது.

Trending

Exit mobile version