சினிமா செய்திகள்

யோ யோ யோகா கேர்ள் அமலா பால்!

Published

on

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து ஆன பின்னர், நடிகை அமலா பால் சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

அவ்வப்போது, சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் பார்ட்டி புகைப்படங்களையும் பதிவிட்டு, தனது ரசிகர்களை தக்க வைத்து வரும் அமலாபால், தனது உடல் ரகசியத்திற்கு யோகா தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

உடம்பை வில்லாய் வளைக்கும் யோகாக்களை அசால்ட்டாக செய்யும் அமலாபால், அந்த யோகா போஸ் புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க வேண்டுமானல் உடல் ஃபிட்னஸ் மிகவும் அவசியம். அதுவும் நாயகிகளுக்கு சொல்லவே வேண்டாம். இல்லையென்றால், சீரியல் நடிகையாகவோ அம்மா நடிகையாகவோ ஆக்கி விடுவார்கள்.

பாலிவுட் நடிகைகள் இதுபோன்ற உடற்பயிற்சி மற்றும் யோகாக்களை தங்களது உடல் ஃபிட்னஸ்க்காக எப்போதிருந்தோ பின்பற்றி வருகின்றனர்.

கோலிவுட் நடிகைகளும் தற்போது அந்த ரூட்டை பின் தொடர்வது ஆரோக்கியமான விஷயம் தான்.

seithichurul

Trending

Exit mobile version