செய்திகள்

டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்…நேற்று ஒரு நாளில் எத்தனை கோடி தெரியுமா?….

Published

on

தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், மதுபானம் ஒன்றே கொண்டாட்டம் என்கிற நிலைக்கு மதுபான பிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நேற்று மாலை முதலே டாஸ்மாக் கடையில் விற்பனை களை கட்டியது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 147.69 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.26 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.25 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ..27 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.26 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது.

நேற்றே ஒரு நாள் மட்டுமே ரூ.147 கோடி எனில் இன்று இன்னும் அதிகமாக மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கும் என கணிக்கப்படுகிறது. எத்தனை கோடி விற்பனை என்பது நாளை தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version