இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலைக்கு என்ன காரணம்: உள்துறை அமைச்சர் விளக்கம்!

Published

on

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகளான பத்மா என்பவரின் மகள் சௌந்தர்யா என்ற 30 வயது டாக்டர் திடீரென நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் காமராஜ் என்பவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அவர் கூறியபோது, ‘ தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பொதுவாக குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த மன அழுத்தம் ஏற்படும் என்றும் 6 மாதங்களுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட சௌந்தர்யா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மன அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைyஇல் வேறு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கர்ப்பம் ஆன பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது சகஜம்தான் என்றும் இது ஒரு சில பெண்களுக்கு உடனடியாக நீங்கிவிடும் என்றும் சில பெண்களுக்கு 4, 5 வாரங்கள் நீடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மன அழுத்தம் காரணமாகவே சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version